
இன்னும் சில தினங்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இப்பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் சதமடித்தும், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதமடித்தும் தங்களது திறனை நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றுவிட்டதால், நியூசிலாந்துக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் இன்றி இந்திய அணி பசியுடன் காத்திருக்கிறது.