
ஐபிஎல்லில் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனங்களை சுமந்துவந்த விராட் கோலி, அதையெல்லாம் மீறி, ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தொடர்ந்து விளையாடிவந்தார். ஆனால் கடந்த 2 சீசன்களாக அவரது பேட்டிங் ஃபார்மும் மோசமாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை, ஐபிஎல்லில் ஒரு முறை கூட டைட்டில் வெல்லவில்லை என்ற விமர்சனங்கள் மற்றும் மொத்தமாக 4 அணிகளுக்கு கேப்டன்சி செய்தது ஆகியவை விராட் கோலி மீதான அழுத்தத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்க, அது அவரது பேட்டிங்கை கடுமையாக பாதித்தது.
இதையடுத்து தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ளும் விதமாக டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, இந்த சீசனுடன் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.