1-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. ஆனால் தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் ஃபார்ம் முக்கிய காரணம்.
மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.