IND vs SA: ரிஷப் பந்தின் தவறுகள் குறித்து ஜாகீர் கான் கருத்து!
India vs South Africa: இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் செய்யும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள சூழலில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தது. இதனால் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் மீது மட்டும் இன்னும் விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை.
Trending
நடப்பு தொடரில் ரிஷப் பந்தின் கேப்டன்சி சரியில்லை என கூறுகின்றனர். முதல் 2 போட்டிகளில் அக்ஷர் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஏன் டாப் ஆர்டரில் களமிறக்கவில்லை. பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் கான், “ரிஷப் பந்த் ரன்கள் அடிக்கும் போது, ரசிகர்கள் அவரை பற்றி பேசுகின்றனர். அவர் அடிக்கவில்லை என்றாலும் பேசுகின்றனர். அவருக்கு சில கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவரின் கேப்டன்சி வித்தியாசமாக அமைந்துள்ளது.
எப்போதுமே கட்டத்தை விட்டு, வெளியே யோசிக்கிறார். வியூகங்களை விட, அவரின் உள்ளுணர்வுகளை மட்டுமே அவர் அதிகம் பின்பற்றுகிறார். இதற்காக பல ரிஸ்க்-களும் எடுக்கப்படுகின்றனர். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை, ரிஸ்க் எடுக்கும் போதெல்லாம், அதனை சரிசெய்யும் திட்டத்தை பண்ட் வைத்துக்கொள்ளவில்லை. அதை சரி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இதே போல பேட்டிங் மிக மோசமாக அமைந்துள்ளது. கடந்த 4 போட்டிகளில் 29, 5, 6, 17 ஆகிய ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதனால் ரிஷப் பந்தை டி20 தொடரில் இருந்து நீக்கிவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now