Advertisement

அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் - ரவி சாஸ்திரி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இடம் பெறுவார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 22, 2023 • 16:41 PM
'He will be banging that door down': Ravi Shastri
'He will be banging that door down': Ravi Shastri (Image Source: Google)
Advertisement

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதன் 31 வது போட்டி இன்று இரவு மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது இந்தப் போட்டியில் ஐபிஎல் இன் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத இருக்கிறது .

மூன்று வெற்றிகளுடன் புள்ளிகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் . மும்பை அணியும் அதே மூன்று வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது . இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்குமே புள்ளிகளின் பட்டியலில் முன்னேறி செல்வதற்கு உதவும் .

Trending


கடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் ஆன தோல்வியுடன் இந்தப் போட்டியை சந்திக்க இருக்கிறது பஞ்சாப் . ஆனால் தொடர்ந்து பெற்ற மூன்று வெற்றிகளுடன் உற்சாகத்தில் இருக்கிறது மும்பை . இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது . மும்பை அணியை பொறுத்தவரை டேட்டிங்கில் இஷான் கிஷான் கேமரூன் கிரீன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர் . 

அதிலும் குறிப்பாக திலக் வர்மா கடந்த சீசனில் இருந்தே தொடர்ச்சியாக நல்ல பெர்ஃபார்மன்ஸ் கடை கொடுத்து வருகிறார் . ஐபிஎல் போட்டி தொடர்களில் 53.50 சராசரி வைத்திருக்கும் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 158.52, இந்த வருட ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதல் 12 இடங்களுக்குள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 

கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் பண்டிதர்கள் திலக் வர்மாவை எதிர்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கணித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திலக் வர்மாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார் .

இது தொடர்பாக பேசிய அவர், “திலக் வர்மா ஒரு அற்புதமான வீரர் . இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியிலேயே இவர் இந்திய அணிக்கான எதிர்கால வீரர் என்று நான் கூறியிருந்தேன் . வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இவர் இடம் பெறுவார் . அவரிடம் அதற்கான திறமை மற்றும் பக்குவம் இருக்கிறது . அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார். 

அவரிடம் உள்ள சிறப்பம்சமே என்னவென்றால் முதல் 10 பந்துகளிலும் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஷாட்களை ஆடுகிறார்.கடந்த போட்டியின் போது ரோஹித் சர்மா பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன் திலக் வர்மா பந்துவீச்சாளர்களை ஆடுவதில்லை. தனக்கு வீசப்படும் பந்துகளை ஆடுகிறார் பந்துகளின் தகுதிக்கேற்ப அவற்றை எதிர்கொண்ட ஆடும் அவரது திறன் நம் எல்லோருடைய கண் முன்னே இருக்கிறது . அதுதான் அவரை மற்றவீரர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement