
ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ, அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
மோசமான ஃபார்ம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்ட விராட் கோலி நிச்சயம் ஆசிய கோப்பையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சவால் விட்டுள்ளதால் அவர் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.