
ICC Test Rankings: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றும் இல்லாமல் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் முதலிரண்டு இடங்களிலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.
அதேசமயம் ஹெடிங்லே டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்திலும், கடைசி இன்னிங்ஸில் சதம் விளாசிய இங்கிலாந்தின் பென் டக்கெட் 5 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து இப்போட்டியில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஒல்லி போப் 19ஆம் இடத்திலும், இந்திய அணியின் ஷுப்மன் கில் 20ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.