
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரே டேவிட் வார்னருக்கு கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இத்துடன் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடக்க, டேவிட் வார்னருக்கு சொந்த மைதானமாக அது அமைய, அவருக்கு சிறந்த பிரிவு உபச்சார விழாவாக அது நிகழ்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேவிட் வார்னர் ஒரு ஆண்டு விளையாடத் தடை பெற்றார். மேலும் அவர் விளையாட வந்த காலங்களில் களத்தில் எதிர் அணி வீரர்களுடன் ஆக்ரோஷமாக மோதும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். இதுவெல்லாம் அவருக்கு விமர்சனத்தை கொடுக்கக் கூடியதாக அமைந்தது.
இந்த நிலையில் அவருடன் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேவிட் வார்னருக்கு இந்த அளவில் பிரிவு உபச்சார விழாவை வைக்க கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் இது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.