
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம் எஸ் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்ற வருட ஐபிஎல் போட்டியின் போது கூட சென்னையில் விளையாடிய பிறகு தான் ஓய்வு பெறுவேன் என அறிவித்திருந்தார் தோனி.
தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பதால் இந்த ஐபிஎல் தொடருடன் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றி கொடுத்துவிட்டு எம்எஸ் தோனி ஐபிஎல் இல் இருந்து ஓய்வு பெறுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.