107 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய ஹென்ரிச் கிளாசென் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன் 11 ரன்னிலும், ஜேக்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை மும்பை இந்தியன்ஸின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர் வீசிய நிலையில் அந்த ஓவரை ஹென்ரிச் கிளாசென் எதிர்கொண்டார்.
The Klaasen counter-attack begins!
That’s a massive six! Is this the spark SRH needed?
Watch the LIVE action https://t.co/sDBWQG63Cl #IPLonJioStar #SRHvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/wAvwypCYn6— Star Sports (@StarSportsIndia) April 23, 2025அப்போது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹென்ரிச் கிளாசென் டீப் மிட் விக்கெட் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார். மேலும் அந்த சிக்ஸரானது 107 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மிக நீள சிக்ஸரை விளாசிய வீர்ர் எனும் பெருமையும் கிளாசென் பதிவுசெய்து அசத்தினார். இந்நிலையில் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குரித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now