
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 28ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் குயின்டன் டி காக் - பென் மெக்டர்மோட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது. தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய டி காக் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு முனையில் அதிரடியில் மிரட்டிய பென் மெக்டர்மோட்டும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதவுசெய்ததுடன், அணியின் ரன் வேகத்தையும் அதிகரித்தார்.