
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து 8 போட்டிகளாக கராச்சி கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பாபர் ஆசமுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் பட் கூறும்போது, “பிபிஎல் கிரிக்கெட்டில், உங்கள் அணியில் சரியான சமநிலை இல்லை என்றால், நீங்கள் என்ன அதிகமாக ஈடு கொடுத்தாலும் அது பலனளிக்காது. உங்களிடம் நிபுணர்கள் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு வலிமையாக திட்டமிட்டாலும் அது அணிக்கு உதவாது.
நான் பார்த்ததில் ஒன்று அல்லது இருவரைத் தவிர எல்லா முக்கிய வீரர்களும் கராச்சி கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். அந்த அணியில் உள்ள முகமது நபி, இமாத் வாசிம், லூயிஸ் கிரிகோரி, உமைத் ஆசிப், கிறிஸ் ஜோர்டான் என அனைவரும் ஆல்ரவுண்டர்கள்தான். அந்த அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர், அவுட்ரைட் லெக் ஸ்பின்னர் இல்லை. அவர்கள்தான் விக்கெட் வீழ்த்தக் கூடியவர்கள்.