
"He's Going To Play For India": Sunil Gavaskar's Prediction For Young SRH Pacer (Image Source: Google)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து உம்ரான் மாலிக் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஹைதராபாத் வீரர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும், பந்துவீசும் நுணுக்கத்திலும் அனைவரையும் கவர்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.