சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் - ஜிம்மி நீஷம்!
ஐபிஎல் தொடரில் சக நாட்டவரான ட்ரண்ட் போல்ட் இடம் பெற்று இருந்த மும்பை அணியில் வந்த பொழுது, சூர்யகுமார் குறித்து ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ள தகவலை தற்பொழுது பேசியிருக்கிறார்.
இன்றைய டி20 கிரிக்கெட் உலகத்தில் எந்த பேட்ஸ்மேனாலும் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பவர் இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ். இந்த வடிவ கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர பேட்ஸ்மேன் என்று இவரை தாராளமாகச் சொல்லலாம்.
காரணம், பவர் பிளே முடிந்து விளையாட வரும் இவர் வைத்திருக்கும் ஸ்ட்ரைக் ரேட் என்பது 180+. இப்படி ஒரு ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெட்டில் உலகத்தில் எந்த லீக்கில் விளையாடும் பேட்ஸ்மேனுக்கும் கிடையவே கிடையாது. ஆனால் இவர் சர்வதேச போட்டிகளில் இப்படி ஒரு அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார்.
Trending
கடந்த 12 மாதங்களில் 184 ஸ்ட்ரைக் ரேட்டில் மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் உடன் 121 பவுண்டரி மற்றும் 82 சிக்ஸர்களை அடித்து நொறுக்கி இருக்கிறார். மொத்தம் 1625 ரன்களை குவித்திருக்கிறார். இதில் இவரது இரண்டாவது டி20 சதம் நியூசிலாந்து நாட்டில் வைத்து மிகப் பிரமிப்பான அதிரடியில் வந்தது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருந்த ஜிம்மி நீஷம் ஒரு சுவாரசியமான நிகழ்வை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.
இவர் ஐபிஎல் தொடரில் சக நாட்டவரான ட்ரண்ட் போல்ட் இடம் பெற்று இருந்த மும்பை அணியில் வந்த பொழுது, சூர்யகுமார் குறித்து ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ள தகவலை தற்பொழுது பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் மும்பை இந்தியன்ஸ் முகாமில் சேர்ந்த பொழுது, முதல் பயிற்சிக்குப் பிறகு, ட்ரெண்ட் போல்டு என்னை நோக்கி திரும்பி ‘ இவரைப் பார். நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்.’ என்று கூறினார். அப்பொழுது அந்த அணி ரோகித் சர்மா கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை கொண்ட மிகப்பெரிய அணி.
எங்களுக்கு எதிராக சமீபத்தில் நியூசிலாந்தில் அவர் விளையாடிய இன்னிங்ஸ் முற்றிலும் அற்புதமானது. நான் பார்த்த மிகச்சிறந்த பவர் ஹிட்டிங் அது. அவர் ஒரு 360 டிகிரி பேட்ஸ்மேன். நீங்கள் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அவர் அதற்கு நேர் எதிரான ஒரு திட்டத்தில் விளையாடுவார். அவர் தன்னுடைய பிரைம் பேட்டிங் ஃபார்மில் பல ஏபி டிவில்லியர்ஸ்களை எனக்கு நினைவுபடுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now