
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 48 லீக் போட்டிகளும், 3 நாக்அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 16ஆவது ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்ததால், தற்போது வரை எங்கு நடக்கும் என்பது முடிவு செய்யப்படவில்லை. முன்னதாக சமீப காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை ஆன்லைனில் பார்க்க ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கும் காசுகட்டி பார்க்க வேண்டுமே என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஐபிஎல் தொடரை பார்க்க கடந்த ஆண்டு வரை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு காசுக்கட்டி கொண்டு தான் ரசிகர்களும் பார்த்தனர்.
ஆனால் இதனை அம்பானியின் ஜியோ நிறுவனம் சுக்கு நூறாக உடைத்தது. தங்களுடைய புதிய ஒடிடி தளமான ஜியோ சினிமா நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பும் உரிமத்தை வாங்கியது. ஜியோ நிறுவனம் பெரும் தொகையை செலவழித்ததால் ஐபிஎல் க்கு அவர்கள் பெரிய அளவில் காசு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.