 
                                                    இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆடவில்லை,பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.
இந்நிலையி்ல் உடற்தகுதியில்லாத நிலையில் ஆல்ரவுண்டர் வரிசையில் டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியல் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் தோள்பட்டையில் அடிவாங்கி பீல்டிங் செய்ய வராமல் சென்றார். அதன்பின் ஸ்கேன் செய்துபார்த்தபோது அவருக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடும் ஒருவீரர் 100 சதவீதம் உடற்தகுதியில்லாத நிலையில் எவ்வாறு அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முன்னாள் வீர்ர சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        