ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கி, தனது அபாரமான பந்துவீச்சு திறனால் அனைவரது பாராட்டையும் பெற்றது.
முன்னதால் ஆஸ்திரேலிய தொடரில் முகமது சிராஜ் விளையாடச் சென்ற அப்போது அவரது தந்தை காலமானார். ஆனால் ‘கரோனா’ பாதுகாப்பு வளையம் காரணமாக நாடு திரும்ப முடியாததால், தந்தையின் இறுதிச் சடங்கில் இவரால் பங்கேற்க முடியவில்லை.
Trending
இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டியில் அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார்.
இதுகுறித்து தற்போது பேசிய சிராஜ் “எனது தந்தை இறந்த போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊக்கம் அளித்தார். ‘நீங்கள் டெஸ்டில் விளையாட வேண்டும். உங்கள் தந்தையின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. எனவே நீங்கள் நிச்சயம் 5 விக்கெட் கைப்பற்றுவீர்கள்’ என்றார். இப்போட்டியில் இரு இன்னிசிலும் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தினேன். அப்போது சாஸ்திரி சார், ‘‘நீங்கள் 5 விக்கெட் வீழ்த்துவீர்கள் என்று அப்போதே கூறினேன்,’‘ என்றார். பயிற்சியாளர் தந்த ஊக்கம் போட்டியில் சாதிக்க உதவியது. இதேபோல பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் சாரும் ஆதரவாக இருந்தார்.
கேப்டன் கோலி எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.பி.எல்., தொடரில் நான் சிறப்பாக விளையாடாத போது, என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாட வைத்தார் என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now