டி20 உலகக்கோப்பை: ஷாஹீன் பந்துகளை எதிர்கொள்வது குறித்து சச்சின் அட்வைஸ்!
பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.
முந்தைய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் வரிசையை சரித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி இந்திய டாப் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுவும் ரோகித் சர்மாவை வந்தவுடனேயே ஒரு கர்வ் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். கே.எல்.ராகுலுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆக்கி உள்ளே கொண்டு வர, பந்து வரும் திசைக்கு எதிராக ராகுல் ஆடப்போய் தொடையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார். விராட் கோலி அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார், அவரையும் ஷாஹின் அஃப்ரீடிதான் வீழ்த்தினார்.
Trending
அதன் பிறகு ஆசியக் கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி காயம் காரணமாக விலகினார். இப்போது ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ், வேகப் பிட்சுக்கு ஷாஹின் அஃப்ரீடி வந்துள்ளார். இவரின் அச்சுறுத்தலை நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் இந்திய பேட்ஸ்மேன்கள் ஷாஹின் அஃப்ரீடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஷாஹீன் ஒரு அட்டாக்கிங் பவுலர். அவர் விக்கெட் எடுக்கவே விரும்புவார். தனது வேகத்தை முன்னிறுத்தி பேட்டர்களை வீழ்த்தும் திறன் அவருக்கு உள்ளது. அதற்காக தனது பந்தை அதிவேகமாக ஸ்விங் செய்வதை அதிகமாக செய்கிறார். அப்படி செய்வதால் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்கு நேராக வந்து லெக் பிஃபோர் விக்கெட்களாக மாறும். அவரை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் 'V' வடிவ யுக்தியை கையாளலாம்.
அதாவாது பேட்ஸ்மேன்கள் தங்களது திசையில் இருந்து V வடிவில் திரும்பி லாங் ஆன், ஸ்ட்ரைட், லாங் ஆஃப் திசைகளில் மட்டும் அவரின் பந்துவீச்சை அடிக்க முயன்றால் போதும். மற்ற திசைகளில் திருப்பி விளையாட நினைத்தால் அது ரிஸ்க்காக அமையலாம். மேலும், ஃப்ரெண்ட் ஃபுட், பேக் ஃபுட் ஷாட்களும் ஆடலாம்" என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now