
Hundred Side London Spirit Coach Shane Warne Tests Covid-Positive, Isolates (Image Source: Google)
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ரட் ஆடவர் தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணியின் பயிற்சியாளராக செயலப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஷேன் வார்னேவுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்,அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லண்டன் ஸ்பிரிட் வெளியிட்ட அறிக்கையில், “லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் வார்னேவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவ கணகாணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் ஆர்டிபிசிஆர் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்படுவார். ஆனால்,அணியில் உள்ள மற்ற வீரர்கள் யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை.”என்று தெரிவித்துள்ளது.