
Hobart Hurricanes vs Sydney Thunder Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நாதன் எல்லிஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணி விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அதேசமயம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேற்கொண்டு இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஹரிகேன்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
HUR vs THU, BBL 2024-25: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் vs சிட்னி தண்டர்
- இடம்: பெல்லரிவ் ஓவல், ஹோபார்ட்
- நேரம்: ஜனவரி 27, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)