
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடபாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முதல் இன்னிங்ஸில் 384 ரன்களை குவிக்க, அடுத்து விளையாடிய பரோடா 348 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டா, தனுஷ் கோட்யான் ஆகியோரது சதத்தின் மூலம் அந்த அணி 569 ரன்களைச் சேர்த்து மிரட்டியது. இதனால் பரோடா அணிக்கு 606 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலைக்கை துரத்திய பரோடா அணியால ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இப்போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி முன்னிலைப் பெற்றதன் காரணமாக அந்த அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் கடைசி விக்கெட்டாக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே சதமடித்து அசத்தியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.