
i-am-excited-and-a-little-emotional-says-rahul-chahar (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார். இவர் கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க முடியா பந்துவீச்சாளராகவும் வலம் வருகிரார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் சஹாருக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரின் போதே இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதன்பின் மூத்த வீரர்களின் ஆதிக்கத்தால் வாய்ப்புக்காக காத்திருந்த ராகுல் சஹாருக்கு கடந்த இலங்கை தொடர் மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்தது.