
இந்தியவில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. அதில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ரியான் பராக். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரியான் பராக் 4 அரைசதங்களுடன் 573 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் நடப்பு தொடரில் 500 ரன்கள் கடந்த சர்வதேச கிரிக்கெட்டர் அல்லாத வீரராகவும் சாதனை படைத்தார்.
இதன் காரணமாக இவருக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்துகள் எழுந்து வந்தன. ஆனாலும் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இனி வரும் தொடர்களில் ரியான் பராக் இந்திய அணிக்காக தேர்வு செய்யபட அதிக வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து ரியான் பராக் சில கருத்துகளை தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து பேசிய ரியான் பராக், “எப்போதாவது, நிச்சயம் நீங்கள் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்துதான் ஆக வேண்டும். இது எனது நம்பிக்கை. அதனால் நான் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்ற கவலை இல்லை. அடுத்த தொடரோ அல்லது 6 மாதங்களுக்கு அடுத்த தொடரோ இல்லை ஒரு வருடத்திற்கு பிறகே ஆனாலும் நான் இந்திய அணிக்கா விளையாட ஆர்வமாக உள்ளேன். நான் எப்போது விளையாட வேண்டும் என்று யோசிக்கவில்லை.