Advertisement

பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!

பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர். அவரைப் போன்ற ஒருவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement
பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!
பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 15, 2023 • 10:24 PM

இந்திய கிரிக்கெட்டில் தற்போது இளைஞர்களுக்கான காலம் நிலவி வருகிறது. குறைந்தபட்சம் நான்கு இளைஞர்களாவது தற்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கான நிரந்தர வீரர்களாக உருவெடுக்க இருக்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பாகவே மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா இந்திய அணிக்குள் வந்து, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, அடுத்த சேவாக் இவர்தான் என்று சொல்ல வைத்தவர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 15, 2023 • 10:24 PM

ஆனால் அதற்குப் பிறகு அவரது குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் விழுந்த நிறைய அடிகள், அவரை இந்திய அணியில் இருந்து மிக தூரமாக வைத்துவிட்டது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடர் அவருக்கு மிக மோசமான தொடராக அமைந்திருந்தது. இந்த நிலையில் அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான நார்தாம்டன்ஷைர் அணிக்கு ஒப்பந்தமாகி, ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தில் ஒரு இரட்டை சதம் அடுத்து ஒரு சதம் என அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அங்கு அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்.

Trending

தற்பொழுது பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “பிரித்வி ஷா இங்கிலாந்து உள்நாட்டு ஒன் டே கப் தொடரில் நார்த்தான்ஸ் அணிக்காக இரட்டை சதம் அடித்தார். அந்த இரட்டை சதத்தின் ஹைலைட்சை பார்த்தேன். அது மிகவும் நன்றாக இருந்தது. அது ஒரு விதிவிலக்கான நாக். அவரின் அசாதாரணமான பேட் ஸ்விங்கை நாம் அனைவரும் அறிவோம். அவர் சிறந்த திறமையான வீரர். அவரைப் போன்ற ஒருவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஏனென்றால் இதுவரை தன் குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை கண்டிருக்கிறார். இந்தியாவில் இருந்து வெளியேறி, இங்கிலாந்து சென்று இருப்பது, புதிய வீரர்களை பார்ப்பது புதிய காற்றை சுவாசிப்பது போல இருக்கும். நான் இங்கிலாந்து சென்று கவுண்டி விளையாடும்போதெல்லாம் அதுதான் உணர்ந்தேன். அதனால் அவரும் இதை பெறுவார்.

அவரது வாழ்க்கை, பணி நெறிமுறைகள் மற்றும் கிரிக்கெட் என அவர் நிறைய கற்று வைத்திருப்பார். தற்பொழுது அவர் இங்கிலாந்தில் சில இளைஞர்களுக்கு அதையெல்லாம் கற்றுக் கொடுக்கும் இடத்தில் இருப்பார். அதுவும் உங்களுடைய கிரிக்கெட்டை மாற்றும். அதனால் நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement