கோலியின் கருத்தால் அதிருப்தியில் கபில் தேவ்!
நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பலவீனமான கருத்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் விளையாடிய இரண்டு போட்டியிலும் படுதோல்வியைச் சந்தித்து, அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது.
அதிலும் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 111 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
Trending
போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, “நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை. பேட்டிங்/பவுலிங் இரண்டிலுமே துணிச்சலாக செயல்படவில்லை. சொல்லப்போனால், இவ்வளவு குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
நாங்கள் துணிச்சலாக பேட்டிங் ஆடவில்லை. எங்களது உடல்மொழியே சரியில்லை. நியூசிலாந்து அணியின் நோக்கம், உடல்மொழி அனைத்தும் சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதெல்லாம் பெரிய ஷாட்டுக்கு முயன்றோமோ அப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்ததால், பெரிய ஷாட் ஆடுவதா, வேண்டாமா என்ற தயக்கம் தொற்றிக்கொண்டது” என்று தெரிவித்தார்.
உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலியிடமிருந்து இப்படி ஒரு கூற்றை சற்றும் எதிர்பார்த்திராத கபில் தேவ், கோலியின் பேச்சால் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
விராட் கோலி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், “விராட் கோலி மாதிரியான பெரிய வீரர் இப்படியொரு பலவீனமான ஸ்டேட்மெண்ட்டை கூறியிருக்கக்கூடாது. ஒரு கேப்டனின் உடல்மொழியும், மனநிலையும் இந்தளவிற்கு பலவீனமாக இருந்தால், அவரால் அணியை வழிநடத்த முடியாது. இதுமாதிரியான வார்த்தைகளை கேட்பது வருத்தமாக இருக்கிறது.
Also Read: T20 World Cup 2021
விராட் கோலி ஒரு ஃபைட்டர். ஒரு கேப்டன், “நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை” என்றெல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள் உங்கள் நாட்டுக்காக ஆடுகிறீர்கள். அப்படியிருக்கும்போது இப்படியெல்லாம் பேசக்கூடாது. கடுமையாக போராடி தோற்கலாம். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விஷயம் கூட இந்திய அணிக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகையில் இல்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now