
சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது மேட்ச் வின்னரும் கூட. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான பவுலிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்.
அதன்விளைவாக, மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்கான இடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவரது கெரியரில் சிறந்த ஃபார்மில் இப்போது உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து மிரட்டினார். இந்நிலையில், சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிடப்படுவதுடன் இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.