
உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறுவது இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான். ஆனால் அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துக்கொண்டே தான் உள்ளன. ஆனால் இந்தியாவின் தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்களும் ஏக்கத்திலேயே காத்துள்ளனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்களை அமைத்தனர். புஜாராவுடன் விளையாடியது குறித்து ரிஸ்வான் பேசினார்.