Advertisement
Advertisement
Advertisement

கோலி அதிகம் சண்டையிடுபவர் - கங்குலி கருத்தால் எழுந்த சர்ச்சை!

விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2021 • 15:22 PM
I like Virat Kohli's attitude but he fights a lot, says BCCI president Sourav Ganguly amid captaincy
I like Virat Kohli's attitude but he fights a lot, says BCCI president Sourav Ganguly amid captaincy (Image Source: Google)
Advertisement

கடந்த ஒரு மாத காலமாகவே இந்திய கிரிக்கெட் அணிக்கும், பிசிசிஐக்கு பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றது. அதில் மிகவும் முக்கிமானது என்றால் ஒருநாள் கேப்டன்சி தான். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதை அடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

Trending


இந்நிலையில் டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார். ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி உண்மையை போட்டு உடைத்தார். 

இதனால் கங்குலி பொய் கூறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கங்குலியிடம் விளக்கம் கேட்ட போது, அவர் பதில் அளிக்கவில்லை

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி கலந்து கொண்டார். அப்போது கங்குலியிடம் எந்த வீரரின் நடத்தையும் செயல்பாடும் உங்களுக்கு பிடிக்குமா என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு சற்றும் யோசிக்காத கங்குலி, விராட் கோலியின் நடத்தை மற்றும் களத்தில் அவரது செயல்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

அத்துடன் பேச்சை முடித்து இருந்தால் இந்த விவகாரம் முடிந்திருக்கும். ஆனால் கங்கலி, விராட் கோலி அதிகமாக சண்டையிடுவார் என்ற கருத்தை கூறிவிட்டார். அதாவது விராட் கோலி அனைவரிடமும், எப்போதும் சண்டை போடுவது தமக்கு பிடிக்காது என்று மறைமுகமாக கங்குலி கூறினார்.

கங்குலியின் இந்த பேச்சு விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தனது பேட்டி மூலம் கங்குலியை விராட் கோலி சிக்க வைத்தார். இதனால் கோலி மீது கங்குலி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 

தென் ஆப்பிரிக்க தொடரை இந்தியா இழந்தாலோ, இல்லை ரன் குவிக்காமல் போனாலோ , அவரது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement