
I only wanted to play for CSK, says Deepak Chahar (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு மற்றும் தீபக் சஹார் உள்ளிட்டோரை சென்னை சூப்பர் கிங்ஸே மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதில் தீபக் சஹார் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், தீபக் சஹார் பேசும் காணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மகேந்திர சிங் தோனி மற்றும் அணி நிர்வாகத்துக்கு நன்றி. வேறு ஒரு ஐபிஎல் அணிக்காக விளையாடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டுமே நான் விளையாட விரும்புகிறேன்" என்றார் தீபக் சஹார்.