
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
முன்னதாக டாஸ் வென்று முதலில் விளைடாடிய இந்திய அணியினர் 49.1 ஓவர்களில் 213 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரன்களும் இஷான் கிஷன் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டரான தனஞ்செயா டிசில்வா 41 ரண்களும் வெல்லலாகே 42 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.