நேற்றைய போட்டியில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன் - கேஎல் ராகுல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குயின்டன் டீ காக் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து விளாசும்போது நாநன் பார்வையாளராகத்தான் இருந்தேன் என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்களில் வென்றது ப்லே ஆஃப் சுற்றை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி உறுதி செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20ஓவர்ளில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்து. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டீ காக் காட்டடிஆட்டம் ஆடி 70 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர் , 3பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் லக்னோ அணி வென்றதையடுத்து, ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியது.
Trending
இந்தப் போட்டியி்ன் வெற்றிக்குப்பின் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் “ கடைசி சில ஓவர்களில் குயிண்டன் டீ காக் அடித்த ஷாட்களைப் பார்த்து நான் ஒரு பார்வையாளராகத்தான் இருந்தேன். டீகாக் தான் சந்தித்த பந்துகளை சரியான ஷாட்களாக ஆடினார்.
சில போட்டிகளில் நாங்கள் தோற்றதற்கு காரணம், இதுபோன்ற வீரர்களுக்கு நல்லவிதமான நாட்கள் அமையவில்லை என்பதுதான். கடைசிப் பந்துவரை போட்டி சென்ற பல போட்டிகளை பார்த்திருக்கவில்லை. கடைசி ஓவர்கள்வரை சென்றிருந்தாலும், இதுபோன்று யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று பரபரப்பாக அமைந்ததில்லை. கடைசிலீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது மகிழ்சியாக இருக்கிறது.
இருஅணிகளுமே அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம், செயல்பட்டோம் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், 3 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறோம்.
ஸ்டாய்னிஸ் கடைசி நேரத்தில் திட்டமிட்டு செயல்பட்டது அற்புதம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி நேரத்தில் சிரமப்படுவார்கள் என்று தெரியும். எந்த இடத்திலிருந்தும் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப முடியும் என்ற நம்பிக்கையை இந்த ஆட்டம் அளித்திருக்கிறது. கடைசிவரை டீகாக் பேட் செய்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
சில ஆட்டங்களில் அவர் தடுமாறினார், ஆனால், சரியான வாய்ப்புக்காக மட்டும் டீகாக் காத்திருந்தார். மோசின்கான் சிறப்பாகப் பந்துவீசினார், திறமையான பந்துவீச்சாளரான மோசின்கானை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினோம். எந்த நேரத்தில் ஸ்லோபால் வீசலாம்,வேகமாக வீசலாம் என்பதை மோசின்கான் அறிந்துள்ளார். விரைவில் மோசின்கான் இ்ந்திய அணியில் இடம்பெறுவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இந்திய அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதுமே தேவை” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now