மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - குயின்டன் டி காக்!
சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உத்திரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் விளையாடுகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வது முக்கியமானதாக இருக்கிறது. தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து இந்தியா என மூன்று முக்கிய அணிகளும் நல்ல ரன் ரேட் பெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து இந்தியா இரண்டு போட்டிகளில் இரண்டையும் வென்று இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் விளையாடி மிகச் சிறந்த ரன் ரேட் வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா போல் ஒரு போட்டியில் தோற்ற இங்கிலாந்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி இறந்த ரன் ரேட்டை பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா இன்று மற்றும் ஒரு பெரிய அணியான தென் ஆப்பிரிக்காவிடம் தோற்க கூடாது. தோற்றால் அரை இறுதிக்கு வருவதில் கூட பெரிய பிரச்சனைகள் உருவாகலாம்.
Trending
போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் கூறும் பொழுது “அவர்களிடம் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் இருக்கிறார். அவர் பந்தை ஆரம்பத்தில் ஸ்விங் செய்து நல்ல விக்கெட் பெறுவார். இறுதியில் நல்ல யார்கர்கள் வீசுவார். மேலும் அவர்களிடம் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல வேகத்தில் பவுன்சர் வீசக் கூடியவர்கள்.
அடுத்து அவர்களிடம் கேமரூன் கிரீன் இருக்கிறார். அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய திறன் படைத்தவர். எனவே அவர்களுக்கு நல்ல வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார். மற்ற அணிகள் அவரைக் குறைத்து மதிப்பிடுவதாக நான் நினைக்கிறேன்.
அவர் நன்றாக செயல்படுகிறார். அவர் நல்ல சுழற் பந்துவீச்சாளர் என்று அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் மற்ற தோழர்கள் அவருக்கு திறமைக்கு சரியான மரியாதையை கொடுப்பதில்லை என்றும் உணர்கிறேன். இதைத்தான் நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன்.நிச்சயமாக இந்த போட்டியில் யார் வெல்வார்கள்? என்று சொல்ல முடியாது. இரண்டுமே சிறந்த அணிகள். யார் சரியான திட்டங்கள் வகுத்து, சரியான முடிவுகளை எடுத்து, அழுத்தத்தை வெல்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now