Advertisement

அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

தம்முடைய காலத்தில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் முதல் ரன்னை எடுப்பதற்கே 40 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் மேக்ஸ்வெல் அதில் சதமடித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2023 • 12:34 PM
அதிரடியாக விளையாடிய  மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 399/8 ரன்கள் விளாசியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104, கிளன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் விளாசிய நிலையில் சுமாராக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 400 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 21 ஓவரில் 90 ரன்களுக்கு சுருண்டது.

Trending


அந்த அணிக்கு அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு 40 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக இதே உலகக்கோப்பையில் இதே டெல்லியில் இலங்கையை புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார். ஆனால் அவரை மிஞ்சிய மேக்ஸ்வெல் 40 பந்திலேயே 9 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் தம்முடைய காலத்தில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் முதல் ரன்னை எடுப்பதற்கே 40 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் மேக்ஸ்வெல் அதில் சதமடித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பெசிய அவர், “ரிவர்ஸ் ஸ்கூப் வாயிலாக அவர் சிக்ஸர் அடித்த ஒரு ஷாட் நான் பார்த்ததிலேயே மகத்தான ஷாட்டாகும். அது சிக்ஸர் சென்றது. ஆனால் அதற்கு 12 ரன்கள் கொடுத்திருக்க வேண்டும். அவருடைய ஆட்டத்திற்கு பின் எதிரணியின் பவுலிங் பதற்றமடைந்து விட்டது. ஏனெனில் அவருக்கு எதிராக எங்கே பந்து வீசுவது என்று தெரியாமல் அவர்கள் தடுமாறினார்கள். உண்மையாகவே இது அற்புதமான முயற்சியாகும். அதிலும் சராசரியாக பந்துக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதை அவர் அடித்தது அபாரமாக இருந்தது. நான் 40 பந்துகளில் தான் முதல் ரன்னை எடுப்பேன். ஆனால் இவர் 40 பந்துகளில் சதமடித்தது அற்புதமானதாகும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement