Advertisement

IND vs SL: முதல் டி20 வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா!

இலங்கையுடனான முதல் டி20 போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 25, 2022 • 10:00 AM
I want Jadeja to bat up the order more, says Rohit Sharma
I want Jadeja to bat up the order more, says Rohit Sharma (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 44 (32), இஷான் கிஷன் 89 (56), ஷ்ரேயஸ் ஐயர் 57 (28) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்ததால், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 192/2 ரன்களை குவித்து அசத்தியது.

Trending


இலக்கை துரத்திக் களமறிங்கிய இலங்கை அணியில் அசலங்கா 53 (47), கருணரத்னே 21 (14), சமீரா 24 (14) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்தார்கள். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டி வந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டும் எடுத்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், இந்த முதல் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், “இஷான் கிஷன் குறித்து நீண்ட காலமாக எனக்கு தெரியும். அவருடைய மைன்ட் செட்டும் எனக்கும் தெரியும். அவர் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தது இதேபோன்ற பெரிய இன்னிங்ஸ்க்காகதான். நினைத்ததுபோல் பெரிய இன்னிங்ஸ் விளையாடினார். இப்படி பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதுதான் இவருக்கு சவாலான விஷயம். திடீரென்று தடுமாற ஆரம்பித்துவிடுவார். நல்லவேளை நான் அருகில் இருந்ததால், தெம்பூட்டும் விதமாக சில வார்த்தைகளை பேசினேன்.

மேலும் ஜடேஜா அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று அவர் 4ஆவது இடத்தில் விளையாடியதுபோல், தொடர்ந்து முன்கூட்டியே களமிறக்கப்படலாம். அவர் சிறந்த பேட்டர். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அவரது ரெக்கார்ட்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். 

இன்று போட்டி நடைபெற்ற மைதானம் மிகவும் பெரியது. இப்படிப்பட்ட மைதானங்களில்தான், பேட்டர்கள் தங்களது திறமையை சோதித்து பார்க்க முடியும். அணி தொடர்ந்து பீல்டிங்கில் சொதப்பி வருகிறது. டி20 உலகக் கோப்பை முன்பு இதனை சரிசெய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement