
கடந்த சில காலமாக இஷான் கிஷன் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு இஷான் கிஷன், டி20, ஒருநாள் என 6 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். அதில் இசான் கிஷன் அடித்த அதிகபட்ச ஸ்கோரே வெறும் 37 ரன்கள் தான். இப்படி இருக்க தோனியின் இடத்தை எப்படி அவரால் நிரப்ப முடியும்.
இலங்கைக்கு எதிரான டி20 யில் 37 ,2, 1 ரன்கள் என அடித்த இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான விளையாடிய 3 ஒரு நாள் போட்டியில் 5,8, 17 ரன்களை தான் அடித்துள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இன்று தொடங்கும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கண்டிப்பாக இஷான் கிஷன் ரன் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமக்கு வழங்கப்பட்ட தொடக்க இடம் பறிக்கப்பட்டதால் தான் ஒரு நாள் தொடரில் இசான் கிசன் சரியாக விளையாடவில்லை என்று கூறப்பட்டது. தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர் தொடக்க வீரராக தான் களமிறங்குகிறார். இதனால் இந்த தொடரில் அப்படி எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாது என்ற காரணத்தால் மீண்டும் பார்முக்கு திரும்ப இசான் கிஷன் தீவிர பயிற்சியில் இறங்கி இருக்கிறார்.