
மும்பை இந்தியன்ஸ் அணியில இந்த சீசனில் பேசுபொருளாக இருந்து வருபவர் 20 வயதான இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா. இந்த சீசனில் இதுவரை 5 லீக் போட்டிகள் விளையாடி 214 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரன்கள் குவித்தவராக இருந்து வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து சொதப்பியபோது, கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார் திலக் வருமா.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 18 பந்துகளில் 22 ரன்கள், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 41 ரன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 25 பந்துகளில் 30 ரன்கள், நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 37 ரன்கள் என கிட்டத்தட்ட 54 ரன்கள் சராசரி மற்றும் 159 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாது, இந்திய அணிக்கும் சிறந்த எதிர்கால வீரராக இருப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னை எப்படி நடத்துகிறார்கள்? இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டத்தை 20 வயதில் எவ்வாறு வெளிப்படுத்த முடிகிறது? ஆகியவை பற்றி சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் திலக் வர்மா.