
I will return home after the teammates leave says CSK Captain MS Dhoni (Image Source: Google)
பயோ பபுளில் உள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் 8 அணியின் வீரர்களும் அவரவர் வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐயும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்தான் தோனி எடுத்துள்ள முடிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பத்திரமாக கிளம்பிய பிறகே தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்புவேன் என தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.