
இந்திய அணி ஆசிய கோப்பைக்கு தயாராக கர்நாடக மாநிலம் ஆலூரில் பயிற்சி முகாமில் மிக வேகமாக தயாராகி வருகிறது. இந்த பயிற்சி முகாம் இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கும் உதவக்கூடிய ஒன்று. ஒவ்வொரு தனிப்பட்ட வீரரின் ஆட்ட அணுகுமுறையையும் தேவையான அளவு மாற்றி அமைத்துக் கொள்ள இந்த பயிற்சி முகாம் உதவி செய்யும்.
தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் விராட் கோலி நடு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க, கிரீசுக்குள் உள்ளே சென்று நின்று வித்தியாசமாக விளையாடி வருகிறார். இன்னொரு புறம் பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகினை சமாளிக்க ரோஹித் சர்மா தொடர்ந்து பயிற்சிகள் ஈடுபட்டு வருகிறார்.
இன்னொரு பக்கத்தில் ஒரு போட்டியில் எந்த இருவர் சேர்ந்து விளையாட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறதோ, அந்த படியான ஜோடிகள் களம் இறக்கப்பட்டு விளையாடி வருகிறார்கள். இப்படி இந்த பயிற்சி முகாமில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.