கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவதே லட்சியம் - வநிந்து ஹசரங்கா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றுவதே லட்சியம் என ஹசரங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர ஆல் ரவுண்டராக பார்க்கப்படுபவர் வநிந்து ஹசரங்கா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கூட தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றுவதே லட்சியம் என ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹசரங்கா, ‘எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் விக்கெட்டை பெற விரும்புகிறேன். மேலும் பாபர் அசம் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக இதுவரை 29 ஒருநாள், 33 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now