
I Would Never Have Somebody Like Ashwin In My T20 Team, Says This Ex Cricketer (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை டெல்லி அணி இருமுறை தவறவிட்டது. அதாவது முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணியிடமும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா அணியிடமும் டெல்லி அணி தோல்வியடைந்து வெளியேறியது.
லீக் சுற்றுகளின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியிருந்த வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது டெல்லி அணிக்கு மிக மோசமான விசயமாக மாறியது.