
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “இன்றைய ஆட்டத்தில் மைதானம் நேரம் செல்ல செல்ல மெதுவாக இருந்தது. சிஎஸ்கே அணியில் ஷிவம் தூவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு நாங்கள் ஆஃப் கட்டர்களை வீச விரும்பினோம், அந்த வகையில் அவரையும் வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினோம்.