
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அடையாளமாக, காலம் முழுவதும் நிலைக்க போகும் ஒரு நிகழ்வு நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் போது நடைபெற்றது. ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு மறக்க முடியாத நினைவுகள் அமைந்திருக்கும். கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மீது பந்து பட்டு பவுண்டரி சென்றது, மேலும் பவுண்டரிகள் கணக்குப்படி இங்கிலாந்து சாம்பியன் என அறிவித்தது இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஒவ்வொரு முக்கிய சம்பவங்கள் அந்த உலகக் கோப்பையின் அடையாள நிகழ்வாக மக்களிடையே பதிவாகிவிடும். இப்படித்தான் நேற்று மேத்தியூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது. நேற்று சதிரா ஆட்டம் இழந்து உள்ளே வந்த மேத்யூஸ் இரண்டு நிமிடங்களுக்குள் பந்தை சந்திக்க தயாராகவில்லை என்று கூறி, ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நடுவர்களிடம் முறையிட, அவர் ஆட்டம் இழந்தவராக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆனால் இன்று மேத்யூஸ் தான் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே ஹெல்மெட் கேட்டதாகவும், தான் காலத்தாமதம் செய்யவில்லை என்றும் காணொளி ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் நேற்று ஷாகிப் அல் ஹசன் கூறும் பொழுது தனது அணியின் வீரர் ஒருவர் இப்படியான டைம் அவுட் விதியை தன்னிடம் கூறியதால் தான் கேட்டதாக தெரிவித்து இருந்தார்.