
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் தீபக் சஹார் சிறந்த ஃபார்மில் இல்லை. பென் ஸ்டோக்ஸால் 4 ஓவர்களை முழுமையாக வீச முடியவில்லை. அனுபவமற்ற துஷர் தேஷ்பண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இதனை கடந்த இரண்டு போட்டிகளில் பார்த்துவிட்டோம்.
முதல் போட்டியில் 178 ரன்களை அடித்தும், சிஎஸ்கேவால் குஜராத் டைடன்ஸை வீழ்த்த முடியவில்லை. காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். இரண்டாவது போட்டியில் ஸ்பின்னர்கள் ன் அலி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரால்தான் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இந்த 2ஆவது போட்டியில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர்கள் 11 ஓவர்களை வீசி வெறும் 2 விக்கெட்களை மட்டும் கைப்பற்றிவிட்டு, 142 ரன்களை வாரி வழங்கியிருந்தார்கள். இது பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது மட்டும் சிஎஸ்கேவுக்கு பிரச்சினை கிடையாது. நோ-பால், ஒயிட்களை அடிக்கடி வீசுகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் 16 ஒயிட் (குஜராத்துக்கு எதிராக 4, லக்னோவுக்கு எதிராக 12), 5 நோ-பால் (குஜராத்துக்கு எதிராக 2, லக்னோவுக்கு எதிராக 3) வீசி சொதப்பியிருக்கிறார்கள். அதாவது, முதல் போட்டியில் தவறு செய்துவிட்டு, இரண்டாவது போட்டியில் அதைவிட அதிகமாகவே சொதப்பியிருக்கிறார்கள்.