காயம் காரணமாக நியூசி, தெ.ஆ தொடர்களில் இருந்து விலகிய இப்ராஹிம் ஸத்ரான்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஸத்ரான் எதிர்வரும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது இன்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியானது ஈரப்பதம் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் டாஸ் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில மணி நேரங்களில் இப்போட்டி தொடரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரரான இப்ராஹ்ம் ஸத்ரான் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
Trending
அதன்படி இப்ராஹிம் ஸத்ரானின் இடது கனுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கொண்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Injury Update
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 8, 2024
Afghanistan’s prolific top-order batter @IZadran18 has been ruled out of the upcoming one-off #AFGvNZ Test and the 3-match #AFGvSA ODI series due to an ankle sprain in his left leg.
Get well Soon, Ibra! #AfghanAtalan | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/bX337neBV1
ஆஃப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமான இப்ராஹிம் ஸத்ரான் இதுநாள் வரை 7 டெஸ்ட், 33 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 19 அரைசதங்களுடன் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் இவர் இல்லாத ஆஃப்கானிஸ்தான் அணியானது நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் எவ்வாறு சமாளிக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், அப்சர் ஸசாய், இக்ராம் அலிகில், பஹீர் ஷா மஹ்பூப், ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷம்ஸ் உர் ரஹ்மான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் கான் பக்தீன், கைஸ் அஹ்மத், கலீல் அஹ்மத், நிஜாத் மசூத்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.
Win Big, Make Your Cricket Tales Now