Advertisement

SL vs AFG, 3rd ODI: இஃப்ராஹிம் ஸத்ரான் அதிரடி; இலங்கைக்கு கடின இலக்கு!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
Ibrahim Zadran smashed 162 off a mere 138 balls to take Afghanistan to their third highest total in
Ibrahim Zadran smashed 162 off a mere 138 balls to take Afghanistan to their third highest total in (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 30, 2022 • 07:00 PM

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 30, 2022 • 07:00 PM

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் முடிவில்லாம் அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லகேலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

Trending

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 ரன்களிலும், ரஹ்மத் ஷா 22 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4 ரன்களிலும் ஆடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இஃப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரானும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதில் நஜிபுல்லா ஸத்ரான் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த இஃப்ராஹிம் ஸத்ரான் 162 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்த் வந்த மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது.

இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement