
ICC allows participating nations to bring 15 players, 8 officials (Image Source: Google)
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 17ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐசிசி அனுமதித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுடன் 8 அணி ஊழியர்களும் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கூடுதல் வீரர்களுக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை காரணமாக கூடுதல் வீரர்களை அழைத்துச் செல்லவும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஆனால், கூடுதல் வீரர்களுக்கான செலவுகளை அந்தந்த அணிகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.