
ICC appoints Geoff Allardice as permanent CEO (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரராக இருந்த ஜெஃப் அலார்டிஸ். இவர் ஐசிசியின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த சில மாதங்களாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெஃப் அலார்டிஸை ஐசிசியின் நிரந்தர தலைமை நிர்வாக அதிகரியாக நியமிப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரியாக நிரந்தரமாக பதவி ஏற்க ஜெஃப் ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் அவர் மிகப்பெரும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.