
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என ஜிம்பாப்வே அணியை கேப்டனாக வழிநடத்திய பிரெண்டன் டெய்லர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரெண்டன் டெய்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜிம்பாப்வே மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் உலகத்தையும் சற்று அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்திய பயணத்தின்போது இந்திய தொழிலதிபர் ஒருவரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வைதான் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
மேலும் இப்போது, எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பல ஆண்டு தடை விதிக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை நானும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனே ஐசிசிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்கு எனது கதை ஒரு பாடமாக இருக்கும் நம்புகிறேன்.