
ICC Begins Process To Identify Hosts For White-Ball Events Post 2023 (Image Source: Google)
நடப்பாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2023 முதல் 2031 வரையிலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2024 முதல் 2031 வரை ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் 20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதில் ஆடவர் பிரிவில் எட்டு ஒருநாள் மற்றும் டி20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஐசிசி இன்று தெரிவித்துள்ளது.