
ICC Board Meet: No outcomes likely as BCCI to ask for time on T20 World Cup (Image Source: Google)
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நேற்று முந்தினம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று நடைபெறவுள்ள ஐசிசியுடனான ஆலோசனையில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து சாத்திய கூறுகளை ஆராய மேலும் எங்களுக்கு கால அவகாசம் தேவை என்று பிசிசிஐ தெரிவிக்கும் என கூறப்படுகிறது.